வடகிழக்கு டெல்லி கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் குடிசை தீப் பற்றி எரிவதை அறிந்து அலரியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அதற்குள் தீ வேகமாக சுமார் 30 குடிசைகளில் தீ பரவியது.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார் தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து தீவிர முயற்சிக்குப் பிறகு அதிகாலை 4 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில், கோகுல்புரி தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வடகிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து மனோஜ் திவாரி மேலும் கூறியதாவது:-
கோகுல்புரி தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் துணையாக நிற்பேன்.
ஒட்டுமொத்த சம்பவத்தின் உணர்திறனை மனதில் கொண்டு தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.1 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட வேண்டும். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
3-வது அலை குறைந்தாலும் டிசம்பர் வரை முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்: தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிவுறுத்தல்