சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 105 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 501ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 12 பேருக்கும், செங்கல்பட்டில் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், திண்டுக்கல், கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதிய தொற்று பதிவாகவில்லை.
இன்று ஒரே நாளில் 265 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 12 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. மாநிலம் முழுவதும் 1,301 பேர் சிகிச்சையில் உள்ளனர்.