மார்ச் 15 அன்று தென்தமிழகக் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 14 வரை தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளது. வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மார்ச் 15 அன்று தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 16 அன்று மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.