உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது.
மேலும், உ.பியில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிப் பெற்றது. இதனால், காங்கிரஸ் கட்சியினர் இம்முறை கடுமையான தோல்வியை சந்தித்தனர்.
இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து, நாளை மாலை 4 மணியளவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், தேர்தலில் தோல்வி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்..
ரசாயன ஆயுதங்களை அனைத்து நாடுகளும் தடை செய்ய வேண்டும்- ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தல்