தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பும் இம்ரான் கான்! வறுத்தெடுக்கும் நெட்டீசன்கள்!

காத்மண்டுவில் உள்ள நேபாளத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ரகசிய சந்திப்பு நடந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியது நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை “காத்மண்டுவில் உள்ள நேபாளத்தில்” ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறினார். அதாவது நேபாள நாட்டில் உள்ள தலைநகரமான காத்மண்டு நகரத்தை நாடு என்றும், நேபாளம் என்பதை நகரம் என்றும் கூறியுள்ளார். இவரது இப் பேச்சு ஒன்றும் புதுசு அல்ல. பல முறை உளறி நெட்டீசன்களிடம் அவர் சிக்கியுள்ளார். 

மேலும் வாசிக்க | “மாநகரத் தந்தை” முதல் “தமிழக முதல்வர்” வரை – மு.க.ஸ்டாலின் குறிப்புகள்

அண்மையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளிக்கும்போது, “ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தாலிபன்களுக்கு தற்போது மாற்று கிடையாது, இப்போது அவர்களை யாராலும் மாற்றவும் முடியாது. மேலும், தாலிபன் அரசு நசுக்கப்பட்டால், வேறொரு நல்ல மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்டால் இல்லைதானே? “விரைவில் தாலிபன் அரசை உலகம் அங்கீகரிக்க வேண்டும்!” என்று கூறினார். இவரது இக் கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், ஜப்பான், ஜெர்மனியுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது என்று கூறினார். பிரான்ஸை ஜப்பான் என்று தவறாகக் கருதி அவர் இந்த கருத்தைத் தெரிவித்தார்.

இதேபோல, 2018 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவை இந்தியா போன்று “வளர்ந்து வரும் நாடு” என்று கூறி கேலி பேச்சுக்குள்ளானார். 

இதுபோலவே 2021 இல், இம்ரான் கான் உஸ்பெகிஸ்தானுக்குப் பயணம் சென்றபோது, உஸ்பெகிஸ்தானின் வரலாற்றைப் பற்றி உஸ்பெக் மக்களை விட தனக்கு அதிகம் தெரியும் என்று கூறியதும் விமர்சனத்துக்கு உள்ளானது. இவ்வாறு பல முறை உளறி மாட்டிக்கொண்டுள்ளதால் நெட்டீசன்கள் இம்ரான் கானை உளறல் மன்னனாக உறுவெடுத்து வருகிறார் என்று கலாய்த்து வருகின்றனர். மீன்களும் அணல்பறக்க பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் வாசிக்க | மு.க. ஸ்டாலின் தேர்தல் கள வரலாறு: எத்தனை வெற்றிகள்? எத்தனை தோல்விகள்?

பாகிஸ்தானில் ஏற்கனவே பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நீடித்து வந்த சூழலில் இம்ரான்கான் பதவியேற்ற பின்னர் அங்கு நிலைமை மேலும் மோசமானது. அரசின் பல்வேறு துறைகள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

Pakistan PM

இதனால் சர்வதேச நாடுகளிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் உருவானது. அப்படி வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது. அவர் ஆட்சியைத் தொடங்கிய 2018-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பாகிஸ்தானின் அரசியலமைப்பை மீறி  54 அவசர சட்டங்களை இம்ரான்கான் அரசு அமல்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிரதமர் இம்ரான்கான் அரசின் மீது தொடரப்பட்ட வழக்கில்,  நாடாளுமன்ற அமர்வுகள் இல்லாதபோது, மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும்போது மட்டுமே அவசர சட்டங்களை அமல்படுத்த முடியும். இவ்வாறான சூழ்நிலையில்லாமல் பொதுமக்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தை மீறுவது பொதுமக்களை அவமதிக்கும் செயலாகும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.