தங்க நகை வைத்திருப்பவர்கள் அதன் தரத்தை அருகில் உள்ள BIS அங்கீகாரம் பெற்ற மையங்களுக்கு சென்று தரப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
BIS எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் தங்களிடம் உள்ள நகையில் ஹால்மார்க் முத்திரை இல்லாவிட்டால் அதை BIS மையங்களுக்கு கொண்டு சென்று பரிசோதித்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. BIS அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் 4 நகைகளை சோதிக்க 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் இதற்குமேல் ஒவ்வொரு நகைக்கும் 45 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக்குப்பின் வழங்கப்படும் சான்றிதழ் நகைகளின் தூய்மைக்கு சான்றாக இருக்கும் என்றும் எனவே அவற்றை எளிதாக விற்க முடியும் என்றும் BIS தெரிவித்துள்ளது. நாடெங்கும் விற்கப்படும் தங்க நகைகளுக்கு தற்போது ஹால்மார்க் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM