“நாங்கள் சொந்த படையினரால் சுட்டுக்கொல்லப்படுவோம்” -சரணடைந்த ரஸ்ய படையினர்! (காணொளி)


உக்ரைனிய படையினரிடம் சரணடைந்த தம்மை, தமது நாடான ரஷ்யாவில் இறந்து விட்டதாகவே கருதுவதாக, உக்ரைனில் இடம்பெற்ற மோதல்களின்போது உக்ரைன் படையினரிடம் சரணடைந்த ரஷ்ய படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் போர் முடிந்ததும் கைதிகள் பரிமாற்ற அடிப்படையில் தாம், ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டால் அங்கு தம்மை படையினர் சுட்டுக்கொன்று விடுவார்கள் என்றும் சரணடைந்த உக்ரைனிய படையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தாம் ரஷ்யாவில் உள்ள தமது பெற்றோரை அழைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது தமக்கு ஏற்கனவே இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பெற்றோர் தம்மிடம் தெரிவித்ததாக ரஸ்ய படை உறுப்பினர் ஒருவர் உக்ரைனில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 24 அன்று கார்கிவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ரஷ்ய படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது தமது நண்பரான லெப்டினன்ட் ஒருவர் 20 வயதுடைய ஒரு பெண்ணையும் அவரது தாயாரையும் காப்பாற்ற முயன்றபோது ரஷ்ய படையினரால் கொல்லப்பட்டதாக சரணைடந்த ரஸ்ய படை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் பல படையினர் ஏற்கனவே உக்ரைனில் சண்டையின்றி சரணடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல ரஷ்ய துருப்புக்கள் மிகவும் அனுபவமற்றவர்களாக உள்ளனர்.

தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது கூட அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

போரைத் தவிர்க்க விரும்பும் வீரர்கள் தங்கள் வாகனங்களின் பெற்றோல் தாங்கியில் வேண்டுமென்றே துளையிட்டனர் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.