வாஷிங்டன்: நெதர்லாந்திற்கான அமெரிக்காவின் தூதராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷெபாலி ரஜ்தான் துகாலை, அதிபர் பைடன் பரிந்துரை செய்துள்ளார். இதற்கான அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
தற்போது 50 வயதாகும் ஷெபாலி ரஜ்தான் துகால், காஷ்மீரை சேர்ந்தவர். அமெரிக்காவில் குடிபெயர்ந்த அவர், சிக்காகோ, சின்சினாட்டி, நியூயார்க் மற்றும் போஸ்டர் நகரில் வசித்து வந்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், அரசியல் ஆர்வலர், பெண்கள் உரிமை வழக்கறிஙர், மனித உரிமை ஆர்வலராக உள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தற்போது மனித உரிமை கண்காணிப்பு குழுவின் கமிட்டி உறுப்பினராக இருக்கும் ஷெபாலி ரஜ்தான் துகால், வேக் வன பல்கலை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.நியூயார்க் பல்கலையில், அரசியல் தொலைதொடர்பில் எம்.ஏ., பட்டமும், மியாமி பல்கலையில் மாஸ் கம்யூனிகேசன் பிரிவில் பட்டமும் பெற்றுள்ளார். பல விருதுகளை பெற்றுள்ள அவர், கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த பெண்ணாகவும் தேர்வு பெற்றுள்ளார். ஒபாமாவின் தேர்தல் பிரசார குழுவிலும் இடம்பெற்றுள்ளார். ஹிலாரி கிளிண்டன் பிரசார குழுவிற்கும், இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.
Advertisement