கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் ரஷியா உயர் மட்ட தூதுக்குழுக்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெறும் நேரடி பேச்சு வார்த்தையே போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேரில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரஷிய அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது மத்தியஸ்தம் செய்யமாறு இஸ்ரேல் பிரதமர் நஃபதலி பென்னெட்டை ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளதாக உக்ரைன் அதிபர் மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்…
போரில் இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு -உக்ரைன் அதிபர் பேட்டி