லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில், பாஜககூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பாஜக மட்டும் 255 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட குறைவு. அதேநேரத்தில் கடந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளை கைப்பற்றிய சமாஜ் வாதி கட்சி, இந்தத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. சமாஜ்வாதி மட்டும் 111 தொகுதிகளை கைப்பற்றியது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு பிறகு முதல் முறையாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு அதிக எண்ணிக்கையையும், அதிக வாக்குகளையும் அளித்த மக்களுக்கு நன்றி. பாஜக.வின் வெற்றி எண்ணிக்கையை குறைக்க முடியும்என்பதை சமாஜ்வாதி நிரூபித்துள்ளது
பாஜக வெற்றி எண்ணிக்கை குறைப்பு இனிமேல் தொடரும். குழப்பங்களும் மயக்கங்களும் பாதி அளவுக்கு குறைந்துவிட்டது. மீதி உள்ள குழப்பம், மயக்கம் எல்லாம் இன்றும் ஓரிரண்டு ஆண்டுகளில் (2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல்) தீர்ந்துவிடும்.
இவ்வாறு அகிலேஷ் சிங் யாதவ் கூறியுள்ளார்.