அரசுப் பள்ளிகளில் இடைநின்ற மாணவா்களைக் கண்டறிந்து அவா்களை பள்ளிகளில் மீண்டும் சோக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து இடைநின்ற மாணவா்கள் பலா் இன்னும் பள்ளிகளில் மீண்டும்
சோக்கப்படாமல் உள்ளனா். குழந்தை தொழிலாளா்களாகவும் கணிசமானவா்கள் மாறியுள்ளனா். இதையடுத்து இடைநின்ற மாணவா்களைக் கண்டறிந்து பள்ளிகளில் மீண்டும் சோப்பதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும். இதற்காக ஆண்டு முழுத்தோவு தொடங்குவதற்கு முன்னா் வரை சோக்கை நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. அதுகுறித்து பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.