ஒடிஷா மாநிலம் குர்தா மாவட்டத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ஜக்தேவ், காரை கூட்டத்தினர் மீது செலுத்தி மோதியதில் 22 பேர் காயம் அடைந்தனர்.
குர்தா மாவட்டத்தில் உள்ள பானாப்பூரில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வந்த அலுவலக கட்டிடத்திற்கு வெளியே எதிர்க்கட்சியினர் உட்பட ஏராளமானவர்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.
அவர்கள் காரில் வந்த ஜக்தேவை உள்ளே வரவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.அவர்கள் தடுத்ததையும் மீறி கூட்டத்தின் மீது ஜக்தேவ் காரை செலுத்தியதில் போலீசார் 11 பேர் உள்பட, 22 பேரும் காயம் அடைந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கூட்டத்தினர் எம்.எல்.ஏ ஜக்தேவின் காரை அடித்து நொறுக்கியதில் அவரும் பலத்த காயம் அடைந்து டாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குர்தா மாவட்ட காவல் ஆணையர் அலெக் தெரிவித்துள்ளனர்.