பிப்ரவரி மாத அன்னிய செலாவணி, ஜனவரி மாத தொழில்துறை உற்பத்தி உயர்வு..!

மார்ச் 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 394 மில்லியன் டாலர் அதிகரித்து 631.92 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகிறது.

பிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில், கையிருப்பு 1.425 பில்லியன் டாலர் குறைந்து 631.527 பில்லியன் டாலராக இருந்தது.

5 முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவுக்கு பிரச்சனையா?

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு செப்டம்பர் 3, 2021 இல் முடிவடைந்த வாரத்தில் 642.453 பில்லியன் டாலர் என்ற வாழ்நாள் உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

அன்னிய செலாவணி

அன்னிய செலாவணி

ஒட்டுமொத்த கையிருப்புகளின் முக்கிய அங்கமான அன்னிய செலாவணி சொத்துக்களின் (எஃப்சிஏ) உயர்வு காரணமாகக் கையிருப்பு அதிகரிப்பு ஏற்பட்டது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வாராந்திர தரவு காட்டுகிறது. மார்ச் 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் எஃப்சிஏ 634 மில்லியன் டாலர் அதிகரித்து 565.466 பில்லியன் டாலராக இருந்தது.

தங்கம் கையிருப்பு

தங்கம் கையிருப்பு

தங்கம் கையிருப்பு 147 மில்லியன் டாலர் குறைந்து 42.32 பில்லியன் டாலராக உள்ளது, சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆர்) 59 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 18.981 பில்லியன் டாலர்களாக உள்ளது. மேலும் IMF உடனான நாட்டின் இருப்பு நிலை 34 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 5.153 பில்லியன் டாலர்களாக உள்ளது என ரிசர்வ் வங்கி கூறுகிறது.

தொழில்துறை வளர்ச்சி
 

தொழில்துறை வளர்ச்சி

மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின் படி, ஜனவரி மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 1.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2021 டிசம்பரில் 10 மாதங்களில் இல்லாத அளவு 0.4%க்குச் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

 தொழில்துறை உற்பத்தி குறியீடு

தொழில்துறை உற்பத்தி குறியீடு

இதேபோல் IIP (தொழில்துறை உற்பத்தி குறியீடு) மூலம் அளவிடப்படும் தொழில்துறை உற்பத்தி ஜனவரி 2021 இல் 0.6 சதவீதம் குறைந்துள்ளது. ஏப்ரல் 2021-ஜனவரி 2022 இல், தொழில்துறை உற்பத்தி 13.7% வளர்ச்சியைக் கண்ட நிலையில், ஏப்ரல் 2020 -ஜனவரி 2021 காலகட்டத்தில் இது -12 சதவீதமாக இருந்தது.

8 துறை

8 துறை

ஜனவரியில் சுரங்க வளர்ச்சி 2.8% ஆகவும், உற்பத்தி வளர்ச்சி 1.1% ஆகவும், ஜனவரியில் மின்சார உற்பத்தி வளர்ச்சி 0.9% ஆகவும் இருந்தது. மேலும் நிலக்கரி, எஃகு, சிமெண்ட், உரம், மின்சாரம், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவை அடக்கிய கோர் பிரிவு வளர்ச்சி ஜனவரி மாதம் 3.7 சதவீதமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Forex reserves rise by USD 394 mn, IIP growth recovers to 1.3 percent

Forex reserves rise by USD 394 mn, IIP growth recovers to 1.3 percent பிப்ரவரி மாத அன்னிய செலாவணி, ஜனவரி மாத தொழில்துறை உற்பத்தி உயர்வு..!

Story first published: Saturday, March 12, 2022, 8:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.