பிரபுதேவா
நடிப்பில் உருவாகவுள்ள ‘
ரேக்ளா
’ படத்தின்
படப்பூஜை
நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பிரபல நடன இயக்குனராக இருக்கு பிரபுதேவா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
தற்போது ‘
வால்டர்
’ படத்தை இயக்கிய அன்பரசன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதையடுத்து பிரபுதேவா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
தனுஷின் ‘மாறன்’ படம் எப்படி இருக்கு.?: ட்விட்டரில் சுட சுட வெளியான விமர்சனம்..!
‘ரேக்ளா’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை அன்பு இயக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்கிறார்.
ஒலிம்பியா
மூவிஸ் சார்பில்
அம்பேத்குமார்
இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.
ஜிப்ரான்
இசையில் உருவாகும் இப்படத்திற்கு கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார்.
ரேக்ளா பந்தயத்தை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நடிகர் பிரபுதேவா, இயக்குனர் அன்பு, வாணிபோஜன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?