புதுடில்லி-ஓய்வூதிய பணப் பயன் திட்டமான, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 44 ஆண்டுகளில் இது மிகவும் குறைவாகும்.நாடு முழுதும் அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றுவோருக்கு, மாத சம்பளத்தில் பி.எப்., பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு ஆண்டு தோறும் வட்டி வழங்கப்படும். நாடு முழுதும் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர், பி.எப்., திட்டத்தில் இணைந்துள்ளனர்.
ஓய்வுக்குப் பின் கிடைக்கக் கூடிய இந்த தொகையே, நடுத்தர வர்க்கத்தினருக்கு, ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை நடத்துவதற்கு பெரிய அளவில் உதவி வருகிறது.வருங்கால வைப்பு நிதியின் கொள்கை முடிவுகளை நிர்ணயிக்கும், மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில், 2021 – 2022ம் ஆண்டுக்கு, 8.1 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டு, 8.5 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், வட்டி விகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 1977 – 1978ம் ஆண்டில் தான் மிகவும் குறைவாக, 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. அதற்கு, 44 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் குறைவான வட்டி தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், சந்தாதாரர்களின் கணக்கில் வட்டி சேர்க்கப்படும்.
Advertisement