பேருந்து கட்டணங்களை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பேருந்து உரிமையாளர்களுக்கு, டீசல் மானியத்தை வழங்க முடியுமா என்பது குறித்து, நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில்,இதன்போது எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக நாளை முதல் முச்சக்கரவண்டிகளின் பயணக்கட்டணங்களை அதிகரிப்பதற்கு அந்த சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஆரம்ப கிலோமீற்றர் தூரத்திற்கு 70 ரூபாவாகவும், ஏனைய கிலோமீற்றருக்கு 55 ரூபா என்ற அடிப்படையிலும் விலையினை அதிகரிக்கவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.