லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை கூறிய புகாரில் ஆசம்கர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பிரதமர், முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்துகளை அஜய் யாதவ் என்பவர் தெரிவித்தார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதன் உண்மைதன்மை குறித்து ஆய்வு செய்த பின்னர், அவரை கைது செய்துள்ளோம். அவர் மீது ஐடி சட்டம் மற்றும் சிஎல்ஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்’ என்றனர்.