உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் ஏற்கனவே பல்வேறு தடைகளை விதித்துள்ளது. ஏற்கனவே பொருளாதார தடை, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை என பல தடைகளையும் விதித்துள்ளது.
இதற்கிடையில் தற்போது ரஷ்யாவின் இருந்து இறக்குமதி செய்யப்படும் வோட்கா, கடல் உணவு, வைரம் உள்ளிட்ட பல வர்த்தகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..?
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் ரஷ்யா மீதான நெருக்கடிக்கு , நிச்சயம் ரஷ்யா பதில் சொல்லியே ஆக வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆடம்பர பொருட்களுக்கு தடை
இதற்கிடையில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் ஆடம்பர பொருட்களையும் தடை செய்வதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற கூட்டாளிகள் ரஷ்யாவின் சம வர்த்தக பங்காளி என்ற அஸ்தஸ்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் ரஷ்யா மீது தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. இதற்கிடையில் கரன்சி மதிப்பும் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் சர்வதேச நிறுவனங்கள் பலவும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன.
வருவாய் இழப்பு
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையினால் ரஷ்யாவின் வருவாயில் 1 பில்லியன் டாலருக்கும் மேலாக இழப்பு ஏற்படலாம். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையினால் உயர்தர கைக்கடிகாரங்கள், உடைகள், டாப் – ஷெல்ஃப் மதுப்பானங்கள், சொகுசு வாகனங்கள் ஆகியவை அடங்கும். இது ரஷ்யா பணக்கார குழுக்களின் வாழ்க்கை முறைகளில் முக்கிய இடம்பெற்றுள்ளன. இது ரஷ்யாவின் ,முக்கிய பொருளாதார துறைகளாக கடல் உணவு, ஆல்கஹால் மற்றும் தொழிற்துறை அல்லாத வைரங்கள் போன்றவற்றிலிருந்து தடை செய்கிறது.
இது கடைசி நடவடிக்கை அல்ல
அமெரிக்காவின் இந்த புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆண்டுக்கு கிட்டதட்ட 550 மில்லியன் டாலர் மதிப்புடையவை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எனினும் இது கடைசி நடவடிக்கை அல்ல, ரஷ்ய அதிபர் புடின் நிச்சயம் எல்லாவற்றிற்கும் விலை கொடுக்கவேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
US to ban Russian diamond and vodka imports amid Ukraine issues
US to ban Russian diamond and vodka imports amid Ukraine issues/ரஷ்யாவுக்கு அமெரிக்கா வைத்த அடுத்த செக்.. இன்னும் பல காத்திருக்கு.. ஜோ பைடன் எச்சரிக்கை!