நேட்டோ படைகளுடன் ரஷ்யா நேரிடையாக மோதினால் இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து உக்ரைனில் ரஷ்யா குண்டு மழை பெய்து வரும் நிலையில், விமான தாக்குதல்களையும் நடத்தி வருகின்றது. இதனால் அப்பாவி மக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நூறு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பலரையும் ஒரே நேரத்தில் புதைக்க முடியாததால் ஒரே குழியை தோண்டி பலரையும் சேர்த்து புதைத்து வருகின்றனர். இப்படி பார்ப்போரின் கண்களில் கண்ணீர் வர வைக்கும் உக்ரைனின் நிலை, மிக மோசமாக இருந்து வருகின்றது.
PF வட்டி விகிதம் 8.10% ஆக குறைப்பு.. ஊழியர்கள் கடும் அதிருப்தி..!
நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்
மக்கள் நடமாட்டம் இன்றி, மயான அமைதியாய் இருந்து வரும் தெருவின் நடுவில், பாழடைந்த கட்டிடங்கள், உருக்குலைந்த வாகனங்கள் பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கிறது.
இதற்கிடையில் தான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என பலவும் ரஷ்யாவின் மீது தொடர்ந்து நெருக்கடியினை கொடுத்து வருகின்றன. ஏற்கனவே பல தடைகளை விதித்துள்ள நிலையில், அடுத்தடுத்த தடைகள் மூலம் ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக முடக்கும் விதமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அடுத்தடுத்த தடைகள்
குறிப்பாக தற்போது ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானம், வோட்கா, கடல் உணவு, வைரம் உள்ளிட்ட பல்வேறு வணிகங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடை செய்துள்ளார்.
மேலும் உக்ரைன் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, சரியான பதிலை கொடுத்தாக வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பாவின் நட்பு நாடுகள் ஒன்றினைந்து சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவை தனிமைபடுத்த நடவடிக்கை
மேலும் ரஷ்ய அதிபருக்கு உதவிகளை செய்து வரும் அந்த நாட்டு தொழிலதிபர்களின் சொத்துக்கள் முடக்கம் உள்ளிட்ட பல நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் எச்சரித்துள்ளார். அதோடு ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆரம்பர பொருட்களின் இறக்குமதியினையும் தடை செய்யப் போவதாகவும் எச்சரித்து உள்ளார். மொத்தத்தில் ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த, முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் நடத்த அமெரிக்கா உள்ளிட்ட பல நட்பு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
உறுப்பினர் நிலையில் இருந்து தடை
இதே ஐரோப்பிய நாடுகளை எடுத்துக் கொண்டால் இரும்பு மற்றும் ஸ்டீல் துறை சார்ந்த அனைத்து இறக்குமதி பொருட்களையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. அதேபோல ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட பல தரப்பினரும் ரஷ்யா உறுப்பினராக உள்ளதை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கிரிப்டோ பரிவர்த்தனைக்கும் தடையா?
இதற்கிடையில் வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்ய முடியாவிட்டாலும், டிஜிட்டல் கரன்சிகள் மூலமாக ரஷ்யா அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளையும் முடக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் ரஷ்யாவுக்கு சுற்றி சுற்றி நெருக்கடிகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இதனை எப்படி ரஷ்ய அதிபர் எதிர்கொள்ள போகிறார், உக்ரைன் மீதான தாக்குதலை இனியாவது குறைப்பாரா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
ukraine – russia crisis! US, European allies increase economic pressure on russia
ukraine – russia crisis! US, European allies increase economic pressure on russia/ரஷ்யாவை நெருக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்.. தாக்குபிடிக்குமா?