ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் தொடர்ந்தால், அது சர்வதேச விண்வெளி நிலையம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு வழிவகுக்கும் என ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தெரிவித்த அந்நிறுவனத்தின் இயக்குனர் ரோகோசின், ரஷ்யா மீதான தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான தொடர்பு பணிகளை மேற்கொள்ளும் ரஷ்ய விண்கல சேவை பாதிக்கலாம் என்றார்.
விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையை சரிசெய்வது, விண்வெளி குப்பைகளைத் தவிர்ப்பது உள்ளிட்ட பணிகளை ரஷ்ய பிரிவு செய்து வருவதாக அவர் கூறினார்.
தற்போதைய தடைகளால் இந்தப் பணிகள் பாதிக்கப்படலாம் என்றும் 500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் கடலிலோ அல்லது நிலத்திலோ விழ வாய்ப்பிருப்பதாகவும் ரோகோசின் குறிப்பிட்டுள்ளார்.