ரஷ்யாவுக்கு சர்வதேச சந்தையில் வழங்கப்பட்ட வர்த்தகத்திற்கான தனிச்சலுகை, உள்ளிட்டவைகளை தடை செய்ய உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகளுடன் இணைந்து ரஷ்யா மீது 4-வது கட்ட பொருளாதார தடைகளை அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு ஆடம்பர பொருட்கள் ஏற்றுமதி செய்யத் தடை, கிரிப்டோ சொத்துக்களை பயன்படுத்த கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பிரான்சில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் ஆகியோர் தெரிவித்தனர்.
இதன் மூலம் ரஷ்யாவின் முதலீடு, தொழில்நுட்ப பகிர்வு, நிதி சேவை, எரிசக்தி சப்ளை உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது