உலக அளவில் ரஷ்யா நிதியளிக்கும் ஊடக சேனல்களை யூ டியூப் நிறுவனம் தடை செய்துள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமான யூ டியூப் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், வன்முறைகளை மறுப்பது, குறிப்பிட்ட மக்களை சிறுமைப்படுத்துவது ஆகியன தங்களின் கொள்கைக்கு எதிராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
எனவே உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பான காட்சிகளை அகற்றுவதாக யூ டியூப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஷாத் ஷாட்லு தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் ஊடகங்களையும் தடை செய்வதாகவும் யூ டியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.