புதுச்சேரி : ரேஷன் கார்டில் இறந்தவர்கள் பெயர் இருந்தால், வரும் 31ம் தேதிக்குள் நீக்கம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடிமைப்பொருள் வழங்கல் துறையால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டில் குறிப்பிட்டுள்ள நபர்களில் எவரேனும் இறக்க நேரிட்டால், அதுகுறித்த விபரங்களை துறை அலுவலகத்தில் உடனடியாக சமர்ப்பித்து, பெயர்களை நீக்கிக் கொள்ள வேண்டியது குடும்பத் தலைவரின் கடமை. நீக்காமல் இருப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே, இறந்தவர் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்காமல் இருந்தால், உடனடியாக அதுகுறித்த ஆவணங்களை வரும் 31ம் தேதிக்குள் குடிமைப்பொருள் வழங்கல் துறையில் சமர்பித்து பெயரை நீக்கிக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.பெயரை நீக்கம் செய்திட dcsca.py.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி : ரேஷன் கார்டில் இறந்தவர்கள் பெயர் இருந்தால், வரும் 31ம் தேதிக்குள் நீக்கம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.