கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 நாள்களாக பற்றி எரிந்த காட்டுத் தீ அணைக்கப்பட்ட நிலையில், கோடைகாலத்தில் காட்டுத் தீயைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதிகளான தோகைவரை, மயிலாடும்பாறை, மச்சூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென பற்றிய காட்டுத் தீ நேற்று அதிக வேகத்துடன் பரவியது. இதில் 500 ஏக்கர் பரப்பில் பசுமரங்களும் புல்வெளியும் தீக்கிரையாகின. வனத்துறையினர் 50க்கும் அதிகமானோர் பல்வேறு குழுக்களாக தீ தடுப்பு எல்லைகளை ஏற்படுத்தி நெருப்பைக் கட்டுப்படுத்தினர். வழக்கமாக கோடைகாலத்துக்கு முன்னர் அமைக்கப்படும் தீ தடுப்பு எல்லைகளை இந்த ஆண்டு வனத்துறையினர் அமைக்கவில்லை என மலைகிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
இதுபற்றி வனச்சரகர் சிவகுமாரிடம் கேட்டபோது, கோடை காலத்தில் காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்க, தீ தடுப்பு காவலர் குழுக்களை அமைத்து இரவும் பகலும் வனப்பகுதிகளுக்குள் முகாமிடுவார்கள் என்று விளக்கமளித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM