ஹாட் டாபிக் ஆன சமந்தாவின் 'ஹாட் டிரஸ்'
'பேமிலி மேன் 2' வெப் சீரிஸில் நடித்து பெயர் வாங்கிய பிறகு சமந்தா ஒரு முடிவோடு தான் இருக்கிறார் போலிருக்கிறது. திருமண பிரிவுக்குப் பின் அவர் இன்னும் அதிகமான கிளாமரில் வலம் வர ஆரம்பித்துவிட்டார். சமீப காலங்களில் சமந்தா வெளியிடும் போட்டோ ஷுட் புகைப்படங்களே அதற்கு சாட்சி. 'புஷ்பா' படத்திலும் ஒரு அதிரடி கவர்ச்சி நடனமாடி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.
இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார் சமந்தா. அதில் சமந்தா தான் ஹாட் டாபிக். அவர் அணிந்து வந்த 'ஹாட்' ஆன டிரஸ் பற்றி பாலிவுட் ஊடகங்கள் பரபரப்பான செய்தி வெளியிட்டிருக்கின்றன. அன்றைய விழாவுக்கு வந்தவர்களில் சமந்தா தான் தனது பேஷன் ஆடையால் அதிகம் பேரைக் கவர்ந்தவர் என்கிறார்கள்.
அந்த ஆடையுடன் சில பல போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார் சமந்தா. தமிழ், தெலுங்கை அடுத்து ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் அவரது 'டார்கெட்' போலிருக்கிறது.