12/03/2022: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை, 2வது நாளாக உயிரிழப்பும் இல்லை…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 13 மாவட்டங்களில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை என்பதுடன்,   இன்று  2வது நாளாக கொரோனா உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 34,51,815 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,50,694 ஆக உள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு ஏதும் இல்லை. 2வது நாளாக உயிரிழப்பு இல்லாதது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38,023 ஆக உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 265 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,12,491 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சையில் 12 பேர் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 43,127 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை  6,49,64,539 மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 0
செங்கல்பட்டு 10
சென்னை 39
கோவை 12
கடலூர் 1
தர்மபுரி 2
திண்டுக்கல் 0
ஈரோடு 3
கள்ளக்குறிச்சி 0
காஞ்சிபுரம் 3
கன்னியாகுமரி 1
கரூர் 0
கிருஷ்ணகிரி 3
மதுரை 2
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 1
நாமக்கல் 1
நீலகிரி 4
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 1
ராமநாதபுரம் 0
ராணிப்பேட்டை 0
சேலம் 2
சிவகங்கை 1
தென்காசி 1
தஞ்சாவூர் 4
தேனி 1
திருப்பத்தூர் 0
திருவள்ளூர் 2
திருவண்ணாமலை 0
திருவாரூர் 0
தூத்துக்குடி 0
திருநெல்வேலி 2
திருப்பூர் 4
திருச்சி 1
வேலூர் 3
விழுப்புரம் 0
விருதுநகர் 1

#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/tn-corona12-03-01.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/tn-corona12-03-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/tn-corona12-03-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item4 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/tn-corona12-03-04.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item5 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/tn-corona12-03-05.jpg) 0 0 no-repeat;
}

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.