50MP கேமரா கொண்ட விலை குறைந்த போன் – விற்பனைக்கு வந்த ரியல்மி சி35!

சீன நிறுவனமான Realme, இந்தியாவில் தொடர்ந்து பல்வேறு தரத்திலான ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் ரியல்மி சி35 ஸ்மார்ட்போனை இந்திய டெக் சந்தையில் அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட்போன், Flipkart மற்றும் ரியல்மி தளங்களில் இன்று (March 12) விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த
Android
ஸ்மார்ட்போனில் புதிய யுனிசோக் புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆம், இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வேரியன்டின் விலை ரியல்மி தளத்தில் ரூ.11,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிரிப்பிள் கேமரா அமைப்பு, 5000mAh பேட்டரி, 18W சார்ஜிங் அடாப்டர் ஆகியன ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

சைலண்டாக அறிமுகமாகும் Nokia போன்கள் – விலையை கேட்டா அசந்து போய்ருவீங்க!

ரியல்மி சி35 அம்சங்கள் (Realme C35 features)

இந்த ஸ்மார்ட்போனில் 6.6″ அங்குல எல்சிடி முழு அளவு எச்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 600 நிட்ஸ் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. 2408×1080 பிக்சல் ரெசலியூஷனை இந்த டிஸ்ப்ளே ஆதரிக்கிறது.

இயங்குதளத்தைப் பொருத்தவரை Android 11 வழங்கப்பட்டுள்ளது. இதன் மீது realme UI R நிறுவப்பட்டுள்ளது. பழைய வெர்ஷன் இயங்குதளங்களைக் கொண்டு ஏழை வாடிக்கையாளர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்று ரியல்மி எண்ணியதா என்று தெரியவில்லை. அத்தனையும் அவுட்டேட்டட்!

இதில்
Unisoc
T616 ஆக்டாகோர் Processor பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், இது 12nm நானோமீட்டர் கட்டமைப்பைக் கொண்ட சிப்செட் ஆகும். அதிகபடியான பேட்டரி திறனை இந்த புராசஸர்கள் உள்வாங்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். எனினும், இந்த புராசஸர் நல்ல திறனை வெளிப்படுத்தும். நடுத்தர பயன்பாட்டுக்கு இந்த புராசஸர்கள் நல்ல ஒத்துழைப்பை தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பக்கா பட்ஜெட் புராசஸர் – Realme அறிமுகம் செய்த 9 SE 5G போன்!

ரியல்மி சி35 கேமரா (Realme C35 Camera)

பின்பக்க கேமராவை பொருத்தவரை, டிரிப்பிள் லென்ஸ் கொண்ட அமைப்பு உள்ளது. 50 மெகாபிக்சல் f/1.8 முதன்மை சென்சாராக உள்ளது. இதனுடன் கூடுதலாக 2 மெகாபிக்சல் Macro கேமரா, 0.3 பிளாக் & வைட் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 8 மெகாபிக்சல் f/2.0 கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. 64ஜிபி, 128ஜிபி ஆகிய இரு ஸ்டோரேஜ் மெமரி வகைகளும் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5.0 ஆதரவை மலிவு விலை ரியல்மி போன் கொண்டுள்ளது.

நம்பினால் நம்புங்கள் – 100 ரூபாய்க்கும் குறைவான 4G டேட்டா ரீசார்ஜ் இருக்கு!

ரியல்மி சி35 விலை (Realme C35 price in India)

அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. வைஃபை (5GHz), ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த ரியல்மி போன் பெறுகிறது.

Glowing green, Glowing Black ஆகிய இரு வண்ணத் தேர்வுகளின் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் 4GB+64GB வேரியண்டின் விலை ரூ.11,999 ஆகவும், 4GB+128GB வேரியண்டின் விலை ரூ.12,999 ஆகவும் ரியல்மி நிறுவனத்தின் பிரத்யேக ஷாப்பிங் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Read more:

Android 12L அப்டேட்: மொழி எதுவானாலும் சரி; நாங்க தரமா காட்டுவோம்! 108MP கேமரா; AMOLED டாட் டிஸ்ப்ளே; 5G இணைப்பு – Redmi போன் இருக்க வேற என்ன வேணும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.