Tamil Nadu News Today LIVE: நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விடுதலை விடுதலையானார்.
என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. ஜெயக்குமார் பேட்டி
என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயற்சித்தனர் . திமுக அரசு’ ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை. முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஹிட்லரின் மறு உருவம் தான் ஸ்டாலின்- சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த ஜெயக்குமார் பேட்டி!
Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 128-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
உக்ரைனில் தவித்த அனைத்து மாணவர்களும் தமிழகம் திரும்பினர்!
உக்ரைனில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் திரும்பினர். கடைசியாக திரும்பிய 10 மாணவர்களுடன் தமிழ்நாடு அரசு அமைத்த சிறப்பு மீட்பு குழுவினரும் காலை சென்னை திரும்புகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவர்களை வரவேற்கிறார்.
Tamilnadu News Update
பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கிய இந்திய ஏவுகணை!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியது. ஏவுகணை தரையிறங்கியதற்கு இந்தியா வருத்தம் தெரிவிப்பதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
அனைத்து கிராமங்களிலும் 75 மரங்களை நட மோடி வேண்டுகோள்!
கிராம சுயாட்சியின் கனவை நிறைவேற்ற பஞ்சாயத்துராஜ் அமைப்பு முக்கியமானது. எனவே 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் 75 மரங்களை நட பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tamil Nadu News LIVE Updates:
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு!
உக்ரைன் ரஷ்யா போரால்’ இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் தகவல்!
அந்த இமயமலை சாமியார் ஆனந்த் சுப்பிரமணியன் தான்.. சிபிஐ!
தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் கைதான நிலையில், ஊழலில் தொடர்புடைய இமயமலை சாமியார் ஆனந்த் சுப்பிரமணியன் தான் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியது.
“ “
தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழக்கவில்லை. ஆனாலும்’ சீனாவின் மீண்டும் ஊரடங்கு என்பதை மனதில் முன்னிறுத்தி மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!
குஜராத் மாநிலத்தில்’ தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க உதவிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு’ ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.
சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையான ஜெயக்குமாரை, பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்தனர்.
மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின், 3வது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
உக்ரைனில் மாணவர்கள் பல சங்கடங்களை அனுபவித்து உள்ளனர். மொழி பிரச்சனைகளை மாணவர்கள் சந்தித்தனர். உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தோம். தாயுள்ளத்தோடு முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கையால் மாணவர்கள் தமிழகம் திரும்பினர் என எம்பி திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களின் கடைசி குழு சென்னை வந்தடைந்தனர். அவர்களை, முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்!
தமிழக அரசின் சிறப்பு மீட்புக்குழு, மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,614 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. வைரஸ் பாதிப்பால்’நேற்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியையும் சேர்த்து மொத்தம் 24 போட்டிகளில் இந்தியாவை உலகக் கோப்பையில் வழிநடத்தியுள்ளார். இதன்மூலம்’ ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு அணியை அதிகமுறை வழிநடத்திய கேப்டன் என்ற சாதனையை மிதாலி படைத்துள்ளார்.
ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பட்டியல் பிரிவினர், பழங்குடிகள், மாற்றுத் திறனாளிகள் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னுரிமை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும், இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த’நிலையில் மக்கள் நீதிமன்றங்கள் இன்று தொடங்குகிறது.
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய இரு நாட்களும் தேசிய அளவில் வேலை நிறுத்தம் நடந்த உள்ளதாக’ வருமான வரித்துறை மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
பராமரிப்பு பணி காரணமாக’ திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத்தேர் உலா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், துணை விமானி சங்கல்ப் யாதவ் உயிரிழந்தார்.
இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான பகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று தொடங்குகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.