நடிகர்
அஜித்
நடிப்பில் சமீபத்தில் வெளியான
வலிமை
திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் இப்படம் வசூல் சாதனை நிகழ்தியது அனைவரும் அறிந்ததே. என்னதான் அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் பல விமர்சகர்களும் இப்படத்தை விமர்சிக்க
ப்ளூ சட்டை மாறன்
இப்படத்தை அவரின் ஸ்டைலிலேயே விமர்சித்தார். இருப்பினும் இந்தமுறை அவர் கொஞ்சம் எல்லை மீறி விமர்சித்துள்ளார்.
படத்தை விமர்சிப்பதை காட்டிலும் அவரின் உருவத்தை கேலிசெய்யும் விதமாக விமர்சித்தது ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா துறையை சார்ந்தவர்களையும் கோபத்திற்கு ஆளாக்கியது.
விஜய் மாறியதற்கு இதுதான் காரணம் : எஸ்.ஏ.சந்திரசேகர்
இதற்கு பலரும் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான
ஆர்.கே.சுரேஷ்
ப்ளூ சட்டை மாறனை எச்சரித்துள்ளார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆர்.கே.சுரேஷ் ஒரு படவிழாவில் கலந்துகொண்டு பேசினார்.
அஜித்
அவர் பேசியது, படத்தை பார்த்து எத்தனையோ பேர் மிகவும் நாகரிகமாக விமர்சனம் செய்கின்றனர். அதைத்தாண்டி ஒருவரின் உருவத்தை வைத்து கேலி செய்து அதன் மூலம் சம்பாதிப்பது முற்றிலும் தவறு.
அஜித்
அஜித்தை கிண்டல் செய்வதற்கு நீ யார், ஒரு படம் எடுப்பது ஒன்னும் எளிதான காரியமில்லை. அதில் பலருடைய உழைப்பு அடங்கியிருக்கின்றது. அப்படி கஷ்டப்பட்டு எடுக்கும் படங்களை விமர்சனம் என்ற பெயரில் மோசமாக பேசி கெடுத்து விடுகின்றீர்கள் என ஆவேசமாக பேசி அரங்கையே அதிரவைத்தார் ஆர்.கே.சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
சால்ட் & பெப்பர் தாடியும், காதில் கடுக்கனும்’ அஜித்தின் நியூ லுக்!