புதுடெல்லி:
அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில் இன்று காலை 8.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவானது. திக்லிபூரில் இருந்து தென் கிழக்கே 225 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இதையும் படியுங்கள்…மருந்து கடைகளுக்கு தீ வைத்த மருத்துவ மாணவர்கள்- பீகாரில் பதற்றம்