அரசியலமைப்பு மற்றும் மதசுதந்திரம் என்ற போர்வையில், அரசியலமைப்பு மற்றும் மத சுதந்திரம் என்ற போர்வையில் நாட்டில் வளர்ந்து வரும் மத வெறி மற்றும் அரசு இயந்திரத்தில் நுழைவதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் விரிவான திட்டங்கள் இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் தனது 2022-ம் ஆண்டு அறிக்கையில் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க அமைப்பாக்கப்பட்ட வலிமையுடன்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
“நாட்டில் வளர்ந்து வரும் மதவெறியின் வலிமையான வடிவம் பல இடங்களில் மீண்டும் தலை தூக்கியுள்ளது. கேரளா, கர்நாடகாவில் இந்து அமைப்பு செயல்பாட்டாளர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது இந்த அச்சுறுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. வகுப்புவாத வெறி, கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் சட்டம், மத சுதந்திரம் என்ற போர்வையில் சமூக ஒழுக்க மீறல், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை மீறுதல், அற்ப காரணங்களைத் தூண்டி வன்முறையைத் தூண்டுதல், சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவித்தல் போன்றவற்றை வெளிப்படுத்திம் கொடூரமான தொடர்சியான செயல்கள் அதிகரித்து வருகிறது.” என்று அகமதாபாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்ட ஆண்டு அறிக்கை கூறுகிறது.
நீண்ட கால இலக்குகளைக் கொண்ட ஒரு சதி என்று குறிப்பிட்டு அந்த அறிக்கை கூறியிருப்பதாவது: “அரசு இயந்திரத்தில் நுழைவதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் விரிவான திட்டங்கள் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் பின்னால் நீண்ட கால இலக்கு கொண்ட ஆழமான சதி வேலை செய்யப்படுவதாகத் தெரிகிறது. எண்ணிக்கையின் பலத்தின் அடிப்படையில், அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு எந்த வழியையும் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணியும் உரிமைக்கு எதிராக கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்த அறிக்கை வந்துள்ளது. பல்கலைக்கழக வளாகங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) செல்வாக்கு அதிகரித்து வருவதைப் பற்றி ஆர்.எஸ்.எஸ்-க்குள் கவலையை அதிகரித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் இந்த விவகாரத்தில் தீவிரமாக ஈடுபடாத நிலையில், இந்த விவகாரத்தை உள்ளூரிலேயே கையாள வேண்டும் என்று நம்பும் அதே வேளையில், மூத்த சங்கத் தலைவர்கள், மத அடையாளத்தை வலியுறுத்துவதன் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் லட்சியச் சிறகுகளை விரிப்பதற்கு சான்றாக உள்ளது என்று இந்த சர்ச்சையைக் குறிப்பிட்டுள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா, பைதக்கில் கடந்த ஓராண்டில் சங்கம் ஆற்றிய பணிகளை மதிப்பீடு செய்யவும், எதிர்கால நடவடிக்கையை பட்டியலிடவும், நாடு எதிகொண்டுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை விவாதிக்கவும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அகில பாரதிய பிரதிநிதி சபா (ஏ.பி.பி.எஸ்) என்பது ஆர்.எஸ்.எஸ்-ல் முடிவெடுக்கும் மிக உயர்மட்ட அமைப்பாகும். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் சங்கம் மத மாற்றம் குறித்தான பிரச்னைகளை எழுப்பியுள்ளது.
பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்துக்கள் திட்டமிட்டு மதமாற்றம் செய்யப்படுவதைப் பற்றிய தொடர்ச்சியான தகவல்கள் உள்ளன. இந்த மதமாற்ற அழைப்புக்கு நீண்ட வரலாறு உண்டு, ஆனால், தற்போது புதிய குழுக்களை மாற்றுவதற்கான புதிய வழிகளைக் கண்டடைந்துள்ளனர். இந்து சமுதாயத்தின் சமூக மற்றும் மதத் தலைமைகளும் நிறுவனங்களும் ஓரளவுக்கு விழித்துக்கொண்டு இந்தப் போக்கைத் தடுக்க முனைப்புக் காட்டியுள்ளன என்பது உண்மைதான். இந்த திசையில் மிகவும் திட்டமிட்ட முறையில் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது” என்று இந்த அறிக்கை கூறுகிறது.
ஒருபுறம் இந்து சமுதாயம் விழித்தெழுந்து, சுயமரியாதையுடன் எழுந்து நிற்கிறது என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் “இதைச் சகித்துக் கொள்ளாத விரோத சக்திகளும் உள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளது.
பிளவுகளை அதிகரிக்கும் சக்திகளின் சவால் ஆபத்தானது என்று இந்த அறிக்கை கூறுகிறது. இந்து சமூகத்திலேயே பல்வேறு பிதற்றல் போக்குகள் மூலம் சமூகத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள் பற்றி எச்சரிக்கிறது. “மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆண்டு நெருங்கி வருவதால், அவர்கள் இந்துக்கள் அல்ல’ என்று பிரச்சாரம் செய்வதன் மூலம் ஒரு குழுவைத் தூண்டும் நிகழ்வுகள் உள்ளன,” என்று அது கூறியுள்ளது. அதே நேரத்தில், “இந்துத்துவாவுக்கு எதிராக தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் சதிகளைக் கண்டித்தும், அறிவுஜீவி போர்வையில் தீங்கிழைக்கும் செயல்திட்டம் நடக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை மற்றும் பஞ்சாப் தேர்தலின் போது நடந்த சம்பவங்களைப் பற்றியும் இந்த அறிக்கை பேசுகிறது. அங்கே பிரதமர் நரேந்திர மோடி தனது கான்வாயை தடுத்து நிறுத்தியதால் கூட்டத்தில் உரையாற்றும் திட்டத்தை கைவிட வேண்டியிருந்தது.
“அரசியலில் போட்டி அவசியம். ஆனால், அது ஆரோக்கியமான மனநிலையில் இருக்க வேண்டும், ஜனநாயகத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும்; இனம் கருத்தியல் சார்ந்த தீர்வுகளை எளிதாக்க வேண்டும். சமூகத்தின் வளர்ச்சியை வலுப்படுத்த வேண்டும்… நாட்டின் மாண்புமிகு பிரதமரின் கான்வாயை விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில், நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது, பிரதான சாலையில் நிறுத்திய சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது பாதுகாப்புக்கு நிச்சயமாக ஒரு சவாலாக இருந்தது; ஆனால், அதே நேரத்தில், இந்த கொடூரமான செயல், அரசியல் தந்திரம், மத்திய-மாநில உறவு, அரசியலமைப்பு பதவிகள் போன்றவற்றின் மீதான போக்குகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது,” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“