ஐஸ்வர்யா
ரஜினிகாந்த் தன் காதல் கணவரான தனுஷை பிரிந்துவிட்டார். இதையடுத்து தனுஷை கடுப்பேற்ற தன் முன்னாள் காதலரான சிம்புவை வைத்து படம் பண்ணப் போகிறார் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியது.
தன் முன்னாள் காதலிகளுடன் சேர்ந்து படம் பண்ண
சிம்பு
தயங்குவது இல்லை. காதல் முறிவுக்கு பிறகு ஹன்சிகா, நயன்தாராவுடன் சேர்ந்து நடித்தார் சிம்பு. அதே போன்று ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் போன்று என்று பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று அவர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இடியாப்ப சிக்கலில் சிக்கியிருந்த சிம்புவுக்கு தற்போது தான் நல்ல காலம் பிறந்திருக்கிறது. இந்நிலையில் தேவையில்லாத வம்புகளில் சிக்க அவர் விரும்பவில்லை. இதையடுத்தே ஐஸ்வர்யா விஷயத்தில் ஆரம்பத்திலேயே விளக்கம் அளித்திருக்கிறாராம்.
தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியான சிம்புவின் கெரியர் உச்சத்தில் இருக்கிறது. கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். சம்பளமும் வெயிட்டாக வாங்குகிறார்.
Dhanush:ரஜினியின் பிரம்மாஸ்திரத்தை தவிடு பொடியாக்கிய தனுஷ், ஐஸ்வர்யா