OCF india invites application for 10th and ITI apprentice training: தமிழகத்தின் ஆவடியில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆடை தொழிற்சாலையில் (Ordinance Clothing Factory) 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 180 பயிற்சியிடங்கள் நிரப்பட உள்ளன.
இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.சி.எஃப்-ல், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஓ.சி.எஃப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 180 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பயிற்சி விபரங்கள்
Non ITI Apprentices
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 72
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 6,600
ITI Apprentices
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 108
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 7,700
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 14. அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
இதையும் படியுங்கள்: TNPSC குரூப் 2,2ஏ தேர்வு விண்ணப்பம்; தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பயிற்சி பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ. 100 கட்டணமாக செலுத்த வேண்டும். இருப்பினும் SC/ST, மாற்று திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டண விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க https://www.troopcomfortslimited.co.in/ என்ற இணையதளத்தில் Recruitment என்ற பிரிவில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, PRINT எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி : The General Manager, Ordinance Clothing Factory Avadi, Chennai.
இந்த பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 01.04.2022
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“