புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 3,116 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 90 ஆயிரத்து 991 ஆக உயர்ந்தது.
அதேபோல், கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,15,850 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை 38,069 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 5,559 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,24,37,072 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 180 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில் 96.70 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 86.21 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…மருந்து கடைகளுக்கு தீ வைத்த மருத்துவ மாணவர்கள்- பீகாரில் பதற்றம்