புதுடெல்லி:
நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், இந்தியாவில் மொத்தம் 180 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதில் 96.70 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 86.21 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 2.12 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்…கேரளா அருகே பழுதடைந்த கப்பலில் சிக்கித் தவித்த ஊழியர்கள் மீட்பு – கடலோர காவல்படை நடவடிக்கை