சென்னை:
இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தனி நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய திட்டங்கள், அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வருகிற மார்ச் 18ஆம் தேதி 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் அதிகளவிலான எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகள் 2வது விவசாயப் பட்ஜெட் அறிக்கையில் மிக முக்கியமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவிக்கையில், இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை வேளாண் பட்ஜெட் பூர்த்தி செய்யும் என்றும் கூறியுள்ளார்.