“ரசாயன உரத்தை தவிர்த்து இயற்கை முறையில் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது அதிக அளவில் நமது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது” என ஆளுநர் ஆர் என் ரவி பேசியுள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் உள்ள ருக்மணி சமேத பாண்டுரெங்கன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற வித்யா வித்யாலயா வேதபாடசாலை பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “வேதங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை என்று கூறப்பட்டாலும், இதன் பழமை 8,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறியமுடிகிறது. நமது நோக்கம் பூமியை காப்பதும், மனிதநேயத்தை காப்பதுமாக இருக்க வேண்டும்.
ரசாயன உரங்களை நாம் அதிக அளவில் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரித்தோம். இருந்த போதிலும், தற்போது ரசாயன உரங்களை அதிகம் தொடர்ந்து பயன்படுத்தியதால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது இயற்கை சார்ந்த வேளாண்மைக்கு விவசாயிகள் அதிகளவில் திரும்பி வருகிறார்கள் இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் நமது பூமியை காப்பாற்ற முடியும். 2070ம் ஆண்டு மாசற்ற காற்று நமக்கு முழுமையாக கிடைக்கும். முதற்கட்டமாக 2025ம் ஆண்டுவாக்கில் 100 பில்லியன் வாட்ஸ் கார்பன் பிரி காற்று கிடைக்க வேண்டும் என்பது இலக்கு. இந்த இலக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே நாங்கள் நிர்ணயித்துவிட்டோம்” என்றும் ஆளுநர் பெருமையுடன் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “அடுத்தகட்டமாக 2030ம் ஆண்டில் 500 பில்லியன் வாட்ஸ் தூய சக்தி (கிளின் எனர்ஜி) கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை முன்கூட்டியே எட்டிவிடுவோம். இந்தியாவில் இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்காக ஸ்டார்அப் நிறுவனங்களாக 2014 ஆம் ஆண்டு 400 மட்டும் இருந்தது, 2021ல் இது 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் மூன்றாவது வளர்ந்த நாடு என்ற பெருமையை நாம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்” என்றார்.
சமீபத்திய செய்தி: பும்ரா சமன் செய்த சாதனை: யாருடையது என தெரியுமா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM