இலங்கையின் அவல நிலையை அம்பலப்படுத்திய சர்வதேச ஊடகவியலாளர்



இலங்கையின் தற்போதைய அவல நிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழக ஊடகவியலாளர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல ஊடகவியலாளரான ராதா கிருஷ்ணன் என்பவர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

அதனை தெளிவுபடுத்தும் வகையில் அவர் வெளியிட்ட பதிவில்,

“இலங்கையின் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்று கேட்க வேண்டுமா? இதற்கு ஒரு உதாரணம்: அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் A4 தாள்கள் அதிகளவில் கொள்வனவு செய்து பயன்படுத்துகிறோம். கடந்த ஆண்டு 500 A4 தாள்களுக்கு 600-700 ரூபாய் செலுத்தினேன். கடந்த ஜனவரி மாதம் 500 தாள்களுக்கு 950 ரூபாய் செலுத்தினே். இன்று காலை (மார்ச் மாதம் 11ஆம் திகதி) 500 A4 தாள்களுக்கு 1450 ரூபாயும், இன்று மதியம் (மார்ச் மாதம் 11ஆம் திகதி) 1800 ரூபாய்க்கு கொள்வனவு செய்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இலங்கையில் ஏற்பட்ட விலைவாசியை சர்வதேச ரீதியாக தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.