சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுவது எரிபொருள் விலை அதிகரிப்பு தான்.
வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே எரிபொருள் விலை அதிகரிப்பால், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. அந்தளவுக்கு எரிபொருள் விலையானது உச்சம் தொட்டுள்ளது.
இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், இன்னும் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது.
தங்கம் விலை மீண்டும் குறையலாம்.. எவ்வளவு சரியும்..வாங்கலாமா.. நிபுணர்களின் செம கணிப்பு..!
எரிபொருள் விலை அதிகரிக்கலாம்
இது இனி வரும் வாரங்களிலும் உச்சம் தொடலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பினால், சர்வதேச அளவில் எரிபொருள் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இறக்குமதி நாடுகள் கச்சா எண்ணெயை இன்னும் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் இன்னும் எரிபொருள் விலையானது உச்சம் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலோன் பெட்ரோலியம் விலை அதிகரிப்பு
இதற்கிடையில் இந்தியாவின் முன்னணி எரிபொருள் நிறுவனமான இந்திய ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இலங்கையின் உள்ளூர் துணை நிறுவனமான இலங்கையின் லங்கா ஐஓசியும் விலையை உயர்த்தியுள்ளது. இதனையடுத்து இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியமும் விலையை அதிகரித்துள்ளது.
எவ்வளவு விலை அதிகரிப்பு?
ஏற்கனவே இலங்கையில் கடந்த 1 மாதமாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதற்கிடையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் உள்ளூர் நிறுவனங்களும் விலையை அதிகரித்துள்ள நிலையில், சிலோன் நிறுவனமும் விலையை அதிகரித்துள்ளது. இது பெட்ரோல் விலையை 77 ரூபாயும், டீசல் விலையை 55 ரூபாயும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் டீசல் விலையை 50 ரூபாயாகவும், பெட்ரோல் விலையை 75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் அங்கு 92 ஓக்டோன் ரக பெட்ரோல் விலை 43.5% அதிகரித்து, 254 ரூபாயாகவும், இதெ டீசல் விலை 45.5% அதிகரித்து 176 ரூபாயாவும் அதிகரித்துள்ளது.
பொருளாதார மந்தம்
கடும் பொருளாதார மந்த நிலையில் உள்ள இலங்கையில் ஏற்கனவே பல மணி நேரம் மின்சார பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதற்கிடையில் அங்கு எரிபொருளுக்கும் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக, உக்ரைன் ரஷ்யா பதற்றத்தினால் கச்சா எண்ணெய்-க்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது இன்னும் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்தியாவின் நிலை?
இந்தியாவினை பொறுத்தவரையில் 5 மாநில தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாகவே எரிபொருள் விலையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் இனி வரும் வாரங்களில் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sri Lanka’s state – run oil and gas entity raises fuel prices
Sri Lanka’s state – run oil and gas entity raises fuel prices/இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தினை தொட்ட பெட்ரோல் விலை.. இந்தியாவில் எப்போது?