ஈராக் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க தூதரக கட்டடம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ 12 ஏவுகணைகள் அமெரிக்க தூதரகத்தை தாக்கியதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தூதரகம் புதிதாக கட்டப்பட்டது என்றும் இன்னும் அலுவலகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிகார்கள் தெரிவித்துள்ளனர்.
தூதரக கட்டடத்தை தாக்கியது ஏந்த வகையான ஏவுகணை என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.