உக்ரைனில் இருந்து வெளியேறிய சுமார் 4 லட்சம் பேர் ருமேனியாவில் தஞ்சம்

உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 4 லட்சம் உக்ரைனியர்கள் ருமேனியாவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் இது நாள் வரையில் தொடருகிறது.

உக்ரைனின் ராணுவ நிலைகள் மீதே தாக்குதல் நிகழ்த்தி வருவதாக ரஷ்யா கூறிவரும் நிலையில், இதுவரை ஏராளமான மக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போருக்கு அஞ்சி உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்கள் போலந்து, மால்டோவா, ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதியில் இருந்து இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 542 உக்ரைனியர்கள் ருமேனியாவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.