உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்து நாட்டிற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் கீவ், லிவிவ், கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் பாதுகாப்பாற்ற சூழல் நிலவுவதால் அந்நாட்டில் இருந்து தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சூழலுக்கு ஏற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.