உக்ரைனுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் செல்லும் வெளிநாட்டு வாகனங்கள் தாக்கப்படுமென ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யப் படைகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவதற்கு உதவும் வகையில் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனில் ஆயுதங்களை குவித்து வருவது மிகவும் ஆபத்தான செயல் என ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்தார்.
ஆயுதங்களை ஏற்றி அணிவகுத்துச் செல்லும் வாகனங்கள், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலுக்கான இலக்குகள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ரஷ்யாவின் எச்சரிக்கையை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறிய ரஷ்ய அமைச்சர், உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகள் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றார்.