போலந்திற்கு 4700 அமெரிக்க துருப்புகளும், இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணையும் அமெரிக்கா சார்பில் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
உக்ரைன் – ரஷ்ய போரில், நேட்டோ உறுப்பினரான போலந்து, முக்கிய பகுதியாக மாறியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமெரிக்க உட்பட பல நாடுகள் ராணுவ உதவி வழங்கிட போலந்து முக்கிய தளமாக விளங்குகிறது. ஏரளாமான உக்ரைன் மக்களும் அகதிகளாக போலந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அமெரிக்கா திடீரென துருப்புகளை போலந்திற்கு அனுப்பியதால், அங்கு போர் பரவுக்கூடுமா என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், நேட்டோவின் உறுப்பினராக போலந்து இணைந்து 23 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அங்கிருக்கும் ராணுவ துருப்புகள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கியுள்ளதாக தெரவித்தார். இது, நேட்டோ உறுப்பினர்கள் போலந்துடன் துணை நிற்கும். உறுப்பினர்கள் எல்லைகள் பாதுகாக்கப்படும் என்பதை தெளிவாக காட்டுகிறது.
போலந்தில் நிலைநிறுத்திய பாதுகாப்பு அமைப்பு என்ன?
போலந்தில் இரண்டு பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது. பேட்ரியாட் என்பது ஏவுகணை மற்றும் விமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ஒரு மொபைல் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாகும்.
அதில், ஏவுகணைகளைக் கண்டறிவதற்கான சி-பேண்ட் ஃபேஸ்டு-அரே ரேடார்களும், ஏவுகணையை தடுத்திட பேட்ரியாட் அட்வான்ஸ்டு கேபபிலிட்டி (பிஏசி) சிஸ்டமும், அச்சுறுத்தலை அழித்திட பிஏசி-2 ப்ளாஸ்ட் ஃபிராக்மெண்டேஷன் வார்ஹெட் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் 2019 அறிக்கையின்படி, 1982 இல் முதன்முதலாக பேட்ரியாட் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டன. இவை, 2003 இல் நடந்த Operation Iraqi Freedom’திட்டத்தில் அமெரிக்கப் பாதுகாப்பின் ஒரு பகுதியாக இருந்தன. UAE, குவைத் மற்றும் சவுதி அரேபியாவும் பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்கி தங்களது நாட்டில் நிலைநிறுத்தியுள்ளன.
அமெரிக்கா போலந்தில் படைகளை அதிகரித்தது ஏன்?
போலந்து முதலாம் உலகப் போர் முடிவடையும் வரை பல ஆண்டுகளாக சோவியத் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர், 2 ஆம் உலகப் போரின் போது , போலந்து மீண்டும் நாஜி ஜெர்மனி மற்றும் ரஷ்யாவின் படையெடுப்புப் படைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது.
தொடர்ந்து, 1991இல் போலந்து முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டதையடுத்து, சோவியத் படைகளை வெளியேறின.
இந்நிலையில், தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போலந்து எல்லைக்குள்ளும் ரஷ்யர்கள் நுழையலாம் என அந்நாட்டு தலைவர்கள் அஞ்சுகின்றனர்.
ரஷ்யா, பெலாரஸில் ராணுவ படையை அதிகரித்து வருவதும், முக்கிய காரணமாகும். ஏனெனில், 2020ல் தேர்தலில் பெலாரஷ்ய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மோசடி ஈடுபட்டு பதவிக்கு வந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை சுட்டிக்காட்டி, அவருக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்குமாறு போலந்து அழைப்பு விடுத்திருந்தது.
தற்போது, ரஷ்ய பெலாரஸில் நிலைநிறுத்தியுள்ள படைகளால் அச்சுற்றுதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதிய போலந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் தடுப்பை அதிகரிக்கவும் நேட்டோ துருப்புக்களை நிலைநிறுத்தவும் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அழைப்பை ஏற்று, போலந்து தலைநகர் வார்சாவிற்கு விஜயம் சென்ற ஹாரிஸ், கூடுதல் துருப்புகளையும், இரண்டு பேட்ரியாட் விமான தடுப்பையும் நிறுத்திட உத்தரவிட்டார். போலந்தில் சுமார் 5,000 அமெரிக்கத் துருப்புக்கள் பல ஆண்டுகளாகச் சுழற்சி முயற்சியில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றனர்.
ரஷ்யாவின் போருக்கு மத்தியில், போலந்தில் ராணுவ படைகளை அதிகரித்த அமெரிக்காவின் முடிவை போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடா வரவேற்றார்.
உக்ரைனுக்கு போலந்தின் உதவி என்ன?
உக்ரைனுக்கு மனிதாபிமான மற்றும் ராணுவ உதவிகளை வழங்குவதில் போலந்து முன்னணியில் உள்ளது. போலந்து இருப்பிடத்தை பயன்படுத்தி, அமெரிக்க பென்டகன் அதிகாரிகள் ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்து, ஜெர்மனியில் உள்ள ராணுவ துருப்புகளை, போலந்து மற்றும் ருமேனியாவுக்கு முதலில் மாற்றி, பின்னர் உக்ரைனில் களமிறக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், போலந்தில் இருந்து ராணுவ உதவிகளை வழங்குவது அந்த நாடுகளின் தனிப்பட்ட முயற்சி என தெளிவுப்படுத்தியுள்ளது. அவற்றில் பல நேட்டோவின் உறுப்பினராக இருந்தாலும், அவை கூட்டணி அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் முறையான நடவடிக்கையாக அல்ல என கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், போலந்து தனது MiG-29 போர் விமானங்கள் அனைத்தையும் ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானத் தளத்திற்கு அனுப்பி பின்னர் உக்ரைனுக்கு வழங்க முன்வந்தது. ஆனால், அதனை அமெரிக்கா நிராகரித்தது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ” தற்போது போர் விமானங்களை அனுப்புவது, புதினையும், ரஷ்யாவையும் தவறான நடவடிக்கைக்கு அழைத்து செல்லாம். இது நேட்டோவுக்கும் நல்லதல்ல, அமெரிக்கா மற்றும் தேசிய பாதுகாப்புக்கும் நல்லதல்ல. இந்த மோதல் தொடர்ந்தால், அது நிச்சயமாக உக்ரைன் மக்களுக்கு நல்லதாக இருக்காது என தெரிவித்தார். ஆனால், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு போலந்து சொந்தமாக ராணுவ உதவிகளை வழங்கியது.
Konwój z amunicją, którą przekazujemy Ukrainie dotarł już do naszych sąsiadów. Wspieramy Ukraińców, jesteśmy solidarni i stanowczo sprzeciwiamy się rosyjskiej agresji. pic.twitter.com/Wx5zoXBnBe
— Mariusz Błaszczak (@mblaszczak) February 25, 2022
பிப்ரவரி 25 அன்று ட்வீட் செய்த போலந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியஸ் ப்லாஸ்சாக், உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவி அவர்களது நாட்டை அடைந்துவிட்டது. உக்ரைனியர்களை ஆதரிக்கிறோம். அவர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ரஷ்ய ஆக்கிரமிப்பை உறுதியாக எதிர்க்கிறோம் என பதிவிட்டிருந்தார்.
இதுதவிர போலந்தில் ஆயிரக்கணக்கான அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். தரவுகளின்படி, பிப்ரவரி 24 முதல் மார்ச் 11 வரை, 2,504,893 உக்ரேனியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதில், 1,524,903 பேர் போலந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.