உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் – போப் ஆண்டவர் வேண்டுகோள்

வாடிகன்,
உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கி இன்றுடன் 18 நாள் ஆகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது. மேலும் படைவீரர்கள் பலரும் பலியாகி உள்ளனர். இந்த போரை நிறுத்தவும், சமரச பேச்சில் ஈடுபடவும் ஐக்கிய நாட்டு சபை கோரிக்கை விடுத்தது. இதுபோல போப் ஆண்டவர் போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்தார்.

போப் பிரான்சிஸ் வேண்டுகோளை ரஷியா ஏற்கவில்லை. நேற்றும் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட பலர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.
இதையடுத்து போப் ஆண்டவர் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். 
இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:-
போரினால் குழந்தைகள் பலியாவதை ஒருபோதும் ஏற்க முடியாது. குழந்தைகளின் எதிர்காலம், அவர்களின் பெற்றோர் பலியானால், குழந்தைகள் அனாதைகளாகும் நிலை, ஆகியவற்றை பற்றி சிந்தியுங்கள்.
இந்த சிந்தனை உருவானால் போர் நிறுத்தத்திற்கு வழிபிறக்கும். எனவே கடவுளின் பெயரால் போரை நிறுத்துங்கள். அதற்கான ஏற்பாடுகளை தொடங்குகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.