உக்ரைன், ரஷ்யா இடையிலான போரால் ஐரோப்பாவிற்கான தானிய விநியோகச் சங்கிலி அறுபட்டுள்ளதாகவும், உலகளவில் உணவு பொருட்கள் விலையேற அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது.
அண்மையில் ஐரோப்பிய, ஆசிய பொருளாதார ஒன்றியத்திற்கு உணவு பொருட்கள் அனுப்புவதை ஆகஸ்ட் வரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பெலாரஸ், ஆர்மீனியா நாடுகளுக்கு தானிய சப்ளை தடைபட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஐ.நா. உணவு கழக அதிகாரி, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் உலகளவில் கோதுமை விநியோகித்தில் 30 சதவீத பங்கு கொண்டுள்ளதாகவும், இரு நாடுகளும் போர் காரணமாக விநியோகத்தை நிறுத்தி உள்ளதால் உணவுப் பொருட்கள் விலையேற்றம் வரும் நாட்களில் எதிரொலிக்கும் என்றார்.