ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடங்கியதில் இருந்து உக்ரைனின் மரியுபோல் நகரில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், குவியல் குவியலாக மனித உடல்கள் புதைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டின் தெற்கு பிராந்திய நகரமான மரியுபோலில் தொடரும் தாக்குதலால் குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்கள் சிதைந்து சின்னாபின்னாமாகி கிடக்கின்றன. கடந்த 12நாட்களில் மட்டும் அங்கு 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கூறிய உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, மரியுபோல் நகரில் ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தாலும், இன்னும் அந்த நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்றார். மரியுபோல் நகரில் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் குறைந்து வருவதாக அவர் கூறினார்.