காதல் கணவரான தனுஷை பிரிந்த கையோடு
ஐஸ்வர்யா
ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் காதல் பாடல் வீடியோ தான்
முசாபிர்
. தமிழில் பயணி என்கிற பெயரில் வெளியாகவிருக்கிறது.
தென்னிந்திய திரையுலக சூப்பர் ஸ்டாரின் மகளுக்கும், மும்பையை சேர்ந்த பையனுக்கும் இடையேயான காதல் கதை.
இந்நிலையில் முசாபிர் உருவான விதம் குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
முசாபிர் வீடியோவை காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டனர். அதற்குள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. குணடைந்த பிறகு ஷூட்டிங்கை நடத்தி முடித்து, மார்ச் 8ம் தேதி வீடியோவை வெளியிடுவதாக அறிவித்தார் ஐஸ்வர்யா. ஆனால் மார்ச் 7ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து திட்டமிட்டபடி முசாபிர் வீடியோவை வெளியிட முடியவில்லை. இந்நிலையில் முசாபிர் குறித்து தினமும் அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ட்விட்டரில் ஆக்டிவாகிவிட்டார் ஐஸ்வர்யா. அதற்கு காரணம் முசாபிர் என்பது குறிப்பிடத்தக்கது.
டீல், டீல்: ஒரு முடிவுக்கு வந்த தனுஷ், ஐஸ்வர்யா