என்ன நான் ஐஸ்வர்யாவுடன் இணைகிறேனா? விளக்கம் அளித்த சிம்பு..!

நடிகர்
தனுஷ்
மற்றும்
ஐஸ்வர்யா
கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். அன்று துவங்கி இன்றுமுதல் அவர்களை பற்றியே செய்திதான் எங்கு திரும்பினாலும் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் எதுவுமே நடக்காதது போல தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் நடந்துகொள்கின்றனர்.

தங்களை சுற்றி அனைவரும் இந்த விவாகரத்து விஷயம் பற்றியே பேசிவரும் நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். தனுஷ் வாதி,
திருச்சிற்றம்பலம்
ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

தனுஷிற்கு வந்த பயம்..மீண்டும் இணைய முடிவு ? எல்லாத்துக்கும் அதுதான் காரணம்..!

ஐஸ்வர்யா தான் இயக்கும் ஆல்பம் பாடல் வேலைகளில் இருக்கின்றார். இதற்கிடையே இருவரும் மாற்றி மாற்றி சமூகத்தளங்களில் போஸ்ட் செய்துகொண்டும் உள்ளனர். இந்நிலையில் இவர்களை பற்றி சமூகத்தளங்களில் பல தகவல்களும், வதந்திகளும் பரவிவரும் நிலையில் சமீபத்தில் ஒரு தகவல் தீயாய் பரவியது.

தனுஷ்

அதாவது 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா மீண்டும் படம் இயக்கப்போவதாகவும், அதில் சிம்பு நாயகனாக நடிக்கப்போவதாகவும் ஒரு தகவல் பரவின. மேலும் இப்படத்தின் கதையை ஐஸ்வர்யா தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்போவதாகவும் தகவல்கள் வந்தன.

சிலம்பரசன்

இந்நிலையில் இந்த செய்திக்கு சிம்பு தரப்பிலிருந்து தற்போது விளக்கம் வந்துள்ளது. இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. இது முழுக்க முழுக்க வதந்தி என சிம்பு தரப்பு விளக்கமளித்துள்ளது. இந்த விளக்கத்தின் மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தியேட்டரில் COMEBACK கொடுப்பாரா சூர்யா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.