திருவனந்தபுரம்: பல்வேறு மொழிகளில் 1,500 படங்களுக்கு இசை அமைத்து சாதனை படைத்தவர், எம்.எஸ்.விஸ்வநாதன். 1928ல் கேரளா பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளியில் மலையாள குடும்பத்தில் பிறந்த அவர், 1953ல் ‘ஜெனோவா’ என்ற படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களுக்கு முதன்முறையாக இசை அமைத்தார். பாடகராகவும், தயாரிப்பாளராக வும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்ட எம்.எஸ்.வி 2015ல் காலமானார். அவருக்கு நினைவு மண்டபம் கட்ட கேரள அரசு முடிவு செய்து, முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அவர் இசை பயின்ற பாலக்காட்டில் இந்த மண்டபம் கட்டப்படுகிறது.